கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் மீண்டும் வைபவ்
‘பீட்ஸா’, ‘ஜிகர்தண்டா’, ‘இறைவி’ படங்களின் மூலம் நம்பிக்கைக்குரிய இயக்குநராக தடம் பதித்த கார்த்திக் சுப்புராஜ், தனது “ஸ்டோன் பெஞ்ச்” தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படங்களையும் தயாரித்து வருகிறார். இவரது தயாரிப்பில் இரத்னகுமார் இயக்கத்தில் வெளியான “மேயாத மான்” திரைப்படம் தான் நடிகர் வைபவ்-கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. தற்போது மீண்டும் வைபவ் நடிப்பில் மீண்டும் ஒரு படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கவிருக்கிறார். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜின் உதவியாளரான அசோக் வீரப்பன் இயக்குகிறார். இதில் நாயகியாக ‘நட்பே துணை’ அனகா நடிக்கிறார். தனுஷ் படத்தை இயக்கி முடித்திருக்கும் கார்த்திக் சுப்புராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பிலும், கீர்த்தி சுரேஷ் நடிப்பிலும் இரு வேறு திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.