Tamil Movie Ads News and Videos Portal

”விவேகமான திறமையான இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்” – தனுஷ்

- Advertisement -

குறும்படங்களை இயக்கி அதில் கிடைத்த வரவேற்பின் மூலம் திரையுலகில் நுழைந்து, தனது முதல் படமான “பீட்ஸா” படத்திலேயே தனது முத்திரையைப் பதித்தவர் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். இவரின் இரண்டாம் படமான ஜிகர்தண்டா படத்தில் நடித்த பாபி சிம்ஹா சிறந்த நடிகருக்கான தேசியவிருதையும் பெற்றார். மேலும் இவரது இயக்கத்தில் சென்ற ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பையும் பெற்றது. இவரது இயக்கத்தில் தனுஷ் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் தலைப்பு சுருளி

என்று சொல்லப்பட்டது. ஆனால் அது படத்தின் தலைப்பு இல்லை என்று படக்குழு மறுத்துள்ளது. படத்தின் தலைப்பு இன்னும் அறிவிக்கப்படவில்லை. இப்படத்தில் ‘ப்ரேவ் ஹார்ட்’ மற்றும் ‘தி குரோனிக்கல்ஸ் ஆஃப் நார்னியா’ படங்களில் நடித்த ஜேம்ஸ் காஸ்மோ வில்லனாக நடித்திருக்கிறார். சென்னை, பழநி மற்றும் வெளிநாடுகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்திருக்கும் நிலையில், தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் “கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்திருக்கிறது. நான் நடித்த படங்களிலேயே விரைவாக முடிவடைந்த படம் இதுதான். கார்த்திக் சுப்புராஜ் விவேகமான திறமையான இயக்குநர். அவருடன் பணியாற்றியது மகிழ்ச்சியளிக்கிறது..” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த கருத்துக்கு கார்த்திக் சுப்புராஜ் நன்றி தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Get real time updates directly on you device, subscribe now.