கார்த்தி ஜோதிகா நடித்த படத்தை மொத்தமாக அள்ளிய பட நிறுவனம்
சமீபத்தில் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வெற்றியை அடைந்த தொரட்டி படத்தை SDC பிக்சர்ஸ் சிறப்பாக வெளியிட்டது. தொடர்ந்து திட்டம் போட்டு திருடுற கூட்டம், காவியன் ஆகிய படங்களையும் வெளியிட்டது. தற்போது கார்த்தி ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள தம்பி படத்தின் தமிழ்நாடு தியேட்டரிகல் உரிமையை SDC பிக்சர்ஸே கைப்பற்றியுள்ளது. தம்பி படத்தை பாபநாசம் படத்தை இயக்கிய ஜீத்துஜோசப் இயக்கி இருக்கிறார். ஜோதிகா கார்த்தி முதல் தம்பி படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். தமிழ்சினிமாவில் இப்போதே தம்பி படத்தைப் பற்றிய பாஸிட்டிவ் கமெண்ட்ஸ் வந்து கொண்டிருக்கின்றன. பல முன்னணி வெளியீட்டு நிறுவனங்கள் இப்படத்தை வாங்கி வெளியிட போட்டி போட்ட நிலையில் SDC பிக்சர்ஸ் படத்தை கைப்பற்றியுள்ளது. மேலும் சேரன் நடிப்பில் ராஜாவுக்கு செக், திரிஷா நடிப்பில் கர்ஜனை, தட்றோம் தூக்குறோம் ஆகிய படங்களையும் SDC பிக்சர்ஸ் வெற்றிகரமாக வெளியிட இருக்கிறது. தம்பி படத்தின் வெற்றி தமிழ்சினிமாவில் தவிர்க்க முடியாத வெற்றியாக இருக்கும் எதிர்பார்க்கப்படுகிறது