‘96’ திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‘ஜானு’ படத்தைத் தொடர்ந்து தற்போது தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகியோருடன் இணைந்து ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடிக்கவிருக்கிறார் சமந்தா. மேலும் இதனைத் தொடர்ந்து, புகழ்பெற்ற சங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் ஒரு சுய சரிதை படத்தில் சமந்தா நடிக்கவிருக்கும் தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூரைச் சேர்ந்த பிரபல கர்நாடக இசைப் பாடகியான நாகரத்தினம்மாவின் வாழ்க்கை படமாகவிருக்கிறது. இந்த வேடத்தில் முதலில் நடிப்பதற்காக அனுஷ்காவை படக்குழு அணுகியது. ஆனால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை முன்னிட்டு, தற்போது இந்தப் படத்தில் நாகரத்தினம்மா வேடத்தில் கர்நாடக இசைப் பாடகியாக சமந்தா நடிக்கவிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.