ஒரு படத்தின் இசைவிழா என்பது ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்தால் அதுதான் நிஜமான பாசிட்டிவிட்டி. அப்படியொரு பாசிட்டிவ் எனர்ஜியை கொடுத்தது இன்று சென்னையில் நடைபெற்ற கண்மணி படத்தின் இசை வெளியீட்டு விழா. புதுமுக இயக்குநர் ஸ்ரீமணி இயக்கியுள்ள ஹாரர் படம் கண்மணி பாப்பா. இப்படத்தைப் பற்றி கோலிவுட்டில் உள்ள அத்தனை சினிமா பிரபலங்களும் பெரிதாக பேசிவரும் நிலையில் இன்றைய ஆடியோ விழா நடந்தது. விழா நிறைவில் வருகை புரிந்தவர்களுக்கு நன்றி சொல்லி பேசிய இயக்குநர்,
“சினிமா வாழ்வில் வெற்றிபெற குடும்பத்தில் யாராவது சப்போர்ட் செய்தால் தான் முடியும். எனக்கு என் குடும்பமே சினிமா என்றதும் என்னை எதிர்த்து நின்றது. அந்த நேரத்தில் நான் கரம் பிடித்த என் மனைவி எனக்கு ஊக்கம் கொடுத்தார். அவரால் தான் இன்று இந்த இடத்தில் நிற்கிறேன். அவருக்குப் பெரிய நன்றி” என்றார். இந்த வார்த்தைகளை ஸ்ரீமணி மூளையில் இருந்து சொல்லாமல் இதயத்தில் இருந்து சொன்னார். அதனால் தான் இந்த வார்த்தைகளைச் சொல்லும் போது அவர் கண்கள் கண்ணீர் துளி எட்டிப்பார்த்தது. அது ஆனந்தக் கண்ணீர் மட்டுமல்ல..ஒரு சாமானியன் அடைந்த வெற்றிக்கண்ணீர்