Tamil Movie Ads News and Videos Portal

ஜெயலலிதா தோற்றத்தில் சாதித்த கங்கணா

இன்று மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும் நடிகையுமான ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாள். இந்த நாளில் ’தலைவி’ படத்தின் படக்குழுவினர் அதிகமாக பயன்படுத்தப்பட்ட ஜெயலலிதாவின் புகைப்பட தோற்றம் போல் சிவப்பு கருப்பு பார்டர் கொண்ட வெள்ளைப் புடவையில் கங்கணா இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்கள்.

இதற்கு முன்னர் இவர்கள் வெளியிட்ட கங்கணாவின் தோற்றங்கள் கேலிக்குள்ளாகிய நிலையில், இன்று படக்குழுவினர் வெளியிட்டுள்ள புகைப்படம் கிட்டத்தட்ட 80 சதவீதம் ஜெயலலிதாவின் தோற்ற்த்திற்கு ஒத்து வந்துள்ளது. இதை எந்தவித ஸ்பெசல் மேக்கப்பும் இன்றி சாதித்துக் காட்டியுள்ளனர். முன்னர் வெளிவந்த தோற்றத்தில் புரோஸ்தடிக் மேக்கப் சரியாக கைகொடுக்காததால் சிறப்பு மேக்கப்பை கைவிட்டு, சாதாரண மேக்கப்பைக் கொண்டே ஜெயலலிதாவின் தோற்றத்தை சாதித்திருக்கிறார் கங்கணா ரனாவத்.