Tamil Movie Ads News and Videos Portal

ஜெயலலிதாவின் படத்திற்கு அஞ்சலி செலுத்திய கங்கணா

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினம் இரண்டு நாட்களுக்கு முன்பு அனுசரிக்கப்பட்டது. பல அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். அது போல ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்து வரும் கங்கணா ரணாவத்தும் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார். இது குறித்து கிடைத்திருக்கும் தகலலில், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான தலைவியில் இயக்குநர் விஜய் இயக்கத்தில் கங்கணா நடித்து வருகிறார். இப்படத்தில் நடிக்கத் தொடங்கியவுடனே அவர் ஜெயலலிதா குறித்த அனைத்துத் தகவல்களையும் படிக்கத் தொடங்கினார். அதைப் படித்து முடித்தப் பின்னர் அவருக்கு ஜெயலலிதாவின் மீது மிகப்பெரிய மரியாதையே வந்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் ஜெயலலிதாவின் உருவத்தைப் போல் தன்னை மாற்றிக் கொள்ள ஹார்மோன் மாத்திரைகளை தான் உட்கொண்டு வருவதாகவும் கங்கணா ஒரு பேட்டியில் கூறியுள்ளது நினைவுகூரத்தக்கது.