Tamil Movie Ads News and Videos Portal

அனிருத்தின் பாடலுக்கு கவர் ட்ராக் உருவாக்கி தயாரித்து பாடியுள்ள லண்டன் பாடகர் பிஸ்வஜித் நந்தா

லண்டனில் உள்ள பிளைமவுத் யுனிவர்சிட்டியில் எம்பிஏ பட்டம் பெற்ற இவர், ஐடி துறையில் பணிபுரிந்து வருகிறார்.இசை மீது தீராத ஆர்வம் கொண்ட இவரை, கடந்த சில வருடங்களுக்கு முன்பு அனிருத் இசையில் ‘டேவிட்’ என்கிற படத்தில் இடம்பெற்ற ‘கனவே கனவே’ என்கிற பாடல் ரொம்பவே ஈர்த்துவிட்டது

இந்த நூற்றாண்டின் சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று என சிலாகிக்கும் பிஸ்வஜித், இந்த பாடலின் டிராக்கிற்கு தனது பாணியில் புது வடிவம் கொடுக்க நினைத்தவர் இசையமைப்பாளர் தன்ராஜ் மாணிக்கம் உடன் சேர்ந்து இந்த பாடலுக்கு அற்புதமாக கவர் டிராக்கை புரோகிராம் செய்துள்ளார்..இதுகுறித்து பிஸ்வஜித் கூறும்போது, “எனக்கு தமிழ் தெரியாவிட்டாலும் நான் தமிழ் இசையை வெகுவாக ரசிப்பவன். தமிழகம் எம்எஸ்வி, இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், அனிருத் என மிகத் திறமையான இசைக்கலைஞர்களை கொண்டது.

இந்த ‘கனவே கனவே’ பாடலுக்கு கவர் டிராக் உருவாக்கியதில் ரொம்பவே மகிழ்ச்சி. நிச்சயமாக அனைவரையும் இது கவரும்.
கவர் ட்ராக் மட்டுமல்லாமல், நிறைய தென்னிந்திய பாடல்களை உருவாக்குவதிலும் எனக்கு ஆர்வம் அதிகம். மேலும் ஏ.ஆர்.ரகுமான், அனிருத், ஜிப்ரான், தேவிஸ்ரீபிரசாத், டி.இமான் ஆகியோருடன் இணைந்து பணியாற்றவும் விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார் பிஸ்வஜித் நந்தா.மேலும் இசைக்காகவே தனியாக ‘சிங்கர் பிஸ்வஜித் நந்தா’ என்கிற யூடியூப் சேனலை உருவாக்கியுள்ள இவர், இந்த “கனவே கனவே” பாடலின் கவர் ட்ராக்கை அதில் பதிவேற்றியுள்ளார்.