Tamil Movie Ads News and Videos Portal

கணம்- விமர்சனம்

- Advertisement -

வாழ்க்கையில் சில கணங்கள் நம் வாழ்வையே புரட்டிப்போடும். சில கணங்கள் வாழ்வில் அதிசயத்தை நிகழ்த்தும். சில கணங்கள் நமக்குத் திரும்ப வரவே கூடாதென்றும், சில கணங்கள் வந்நால் நல்லாருக்குமே என்றும் தோன்றும். காலம் மனதில் ஏற்படுத்தும் மாயஜாலம் விவரிக்க முடியாதது

இசையும் நண்பர்களும் என வாழ்ந்து வரும் நாயகன் ஷர்வாவிற்கு டைம் மிஷினில் சென்று விபத்தில் இறந்து போன தன் அம்மாவைப் பார்க்கும் வாய்ப்பு வருகிறது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி தன் அம்மாவை அவர் காப்பாற்றினாரா இல்லையா? என்பதே கணத்தின் கதை

ஷர்வா ஷார்ப்பான நடிப்பால் நம்மை ஈர்க்கிறார். அமலா அம்மாவாக நம் நெஞ்சில் அமர்கிறார். நாசர் கடந்தகாலத்தில் பறிகொடுத்த தன் நண்பனை ..தற்போது காப்பாற்ற தவிக்கும் போது மனதை நிதைக்கிறார். ரிதுவர்மாவிற்கு பெரிய வேலை எதுவும் இல்லை. ரமேஷ் திலக் அடிக்கும் சில கமெண்ட்கள் ரசிக்க வைக்கின்றன

படத்தின் டெக்னிஷீயன்ஸைப் பொறுத்தவரை பொருத்தமான பணியைச் செய்துள்ளனர். பின்னணி இசை படத்தின் கனத்தை உணர்ந்து பயணிக்கிறது. ஒளிப்பதிவும் எதார்த்தத்தை கண்முன் நிறுத்துகிறது.

வழக்கமான அம்மா செண்டிமெண்ட் கதை என்றாலும், வழக்கமான டைம் ட்ராவல் கதை என்றாலும், இரண்டையும் மிகச்சிறப்பாக இணைத்து எமோஷ்னல் கூட்டிய விதத்தில் இயக்குநர் ஜெயித்துவிட்டார் என்றே சொல்லலாம்

மனம் நிறைக்கும் கணம்
3/5
-மு.ஜெகன் கவிராஜ்

#Kanam #கணம்

- Advertisement -