‛எங்கேயும் எப்போதும்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் நடிகர் ஷர்வானந்த். இந்தப்படத்திற்குப் பிறகு தெலுங்கில் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி, அங்கே தற்போது பிஸியான நடிகராக வலம் வருகிறார். இந்நிலையில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் ஸ்ரீ கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள ‛கணம்’ படத்தின் மூலம், மீண்டும் தமிழ்த்திரையுலகில் கால்பதித்துள்ளார் ஷர்வானந்த். இவருக்கு ஜோடியாக ரீது வர்மா நடிக்கும் இப்படத்தில், 80களில் தமிழ் சினிமாவில் கொடிகட்டிப்பறந்த நடிகை அமலாவும் இப்படம் மூலம் மீண்டும் தமிழ்சினிமாவில் களமிறங்கியுள்ளார். இவர்களோடு நாசர், சதீஷ், ரமேஷ் திலக் ஆகியோரும் நடித்துள்ளனர்.
துருவங்கள் 16, மாஃபியா படங்களில் பணிபுரிந்த இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜோய், ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங், எடிட்டர் ஸ்ரீஜித் சாரங் இந்தப்படத்திலும் கூட்டாக பணிபுரிகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.