‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியைத் தொடங்கி அதன் நிறுவனராகவும் இருந்து வரும் நடிகர் கமல்ஹாசன், திரைப்படங்களிலும் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். ’ராஜ்கமல் ப்லிம்ஸ் இண்டர்நேஷனல்’ சார்பாக படங்களையும் தயாரித்து வரும் கமல் ரஜினி நடிக்கும் ஒரு படத்தையும், வெஃப் சீரிஸையும் தன் தயாரிப்பு நிறுவனம் சார்பாக தயாரிக்கவிருக்கிறார் என்கின்ற செய்தியும் சமீபத்தில் வெளியானது.
மேலும் தற்போது 1996ம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற இந்தியன் 2 படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். ரகுல் ப்ரீத் சிங், சித்தாரத், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தில் காஜல் அகர்வால் வயோதிக வேடத்தில் நடிக்கிறார். 85 வயது மூதாட்டியாக நடிக்கும் அவர் இதற்காக பிரத்யேக தற்காப்புப் பயிற்சியை கேரளா சென்று பயின்று வந்திருக்கிறார். முதல் பாகத்தில் சுகன்யா நடித்த கதாபாத்திரத்தில் காஜல் நடிக்கிறார் என்று கருதப்பட்டு வந்த நிலையில், அவர் கமல்ஹாசனின் சீடராக நடிக்கிறார் என்று தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.