கமல் ரசிகர்கள் ஆதி காலத்திலே ரத்தம் கொடுத்ததில் சாதித்து இருந்தார்கள். தாங்கள் மேலும் சாதனையாளர்கள் தான் என்பதை நேற்றும் நிரூபித்துள்ளார்கள் உலகநாயகன் பேன்ஸ். கமல் மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சி ஆரம்பித்த பின் கிராமசபை கூட்டம் என்பதை வருடத்திற்கு நான்குமுறை கூட்ட வேண்டும் என்று திட்டம் போட்டிருந்தார்.
அந்தத் திட்டத்தின் படி மே ஒன்றாம் தேதி கூட்டம் நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால் கொரோனா காரணமாக அக்கூட்டத்தை நடத்த முடியவில்லை. உடனே கமலின் யோசனைப் படி கூட்ட நாளை சேவை நாளாக மாற்றி நேற்று மட்டும் மக்கள் நீதி மய்யத்தினர் ஒரு லட்சம் பேர்களுக்கு உணவு உள்ளிட்ட நிவாரணங்களை வழங்கி அசத்தி இருக்கிறார்கள். வெல்டன்!