கமல் விழாவில் அஜீத் பங்கேற்ப்பாரா..!!?? எகிறும் எதிர்பார்ப்பு
நடிகர் கமல்ஹாசன் திரையுலகில் காலடி பதித்த இந்த ஆண்டோடு 60 ஆண்டுகள் நிறைவடைவதை ஒரு மாபெரும் விழாவாக முன்னெடுக்கத் தொடங்கியிருக்கிறது தமிழ் திரையுலகம். வரும் 17ம் தேதி நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறவிருக்கும் விழாவில் இசையானி இளையராஜா கமலுக்காக தான் இசை அமைத்த பாடல்களை தன் குழுவினரோடு சேர்ந்து மேடையில் அரங்கேற்றவும் இருக்கிறார். இதற்கான ஒத்திகை நிகழ்வுகளும் நடந்து வருகிறது. இந்தியத் திரையுலகில் இருக்கும் முக்கிய நட்சத்திரங்கள் அனைவரும் பங்கேற்க்கவிருக்கும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு தல நடிகர் அஜீத்குமாருக்கும் கமல்ஹாசன் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. தன்னுடைய படம் தொடர்பான எந்தவிதமான ப்ரோமோஷன் நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளாத அஜீத் இந்த விழாவில் கலந்து கொள்வாரா என்கின்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.