இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படத்தை லைகா புரொடெக்ஷன் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படப்பிடிப்புத் தளத்தில் இரு வாரங்களுக்கு முன்னர் நடந்த விபத்தில் உதவி இயக்குநர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். இதனால் இரு வார காலமாக தடைபட்டிருந்த படப்பிடிப்பு தற்போது மீண்டும் தொடங்கி இருக்கிறது. ஆனால் படப்பிடிப்பில் இயக்குநர் ஷங்கர், நாயகன் கமல் இருவருமே இன்னும் கலந்து கொள்ளவில்லையாம்.
படப்பிடிப்பில் நடைபெற்ற விபத்து தொடர்பான அதிர்ச்சியில் இருந்து ஷங்கர் இன்னும் விலகவில்லையாம். இதனால் நாயகி காஜல் அகர்வால் தொடர்பான பாடல் காட்சியில் அவரின் நடன அசைவுகளை மட்டும் தற்போது படம் பிடித்து வருகிறார்களாம். இதனை ஷங்கரின் உதவியாளர்களே செய்து வருகின்றனர். மேலும் லைகா பணியாளர்களின் பாதுகாப்பு, மற்றும் காப்பீடு திட்டங்களை முறைப்படுத்தும் வரை கமல், ஷங்கர் இருவருமே படப்பிடிப்பில் கலந்து கொள்ளப் போவதில்லை என்கின்ற முடிவில் இருக்கிறார்களாம்.