Tamil Movie Ads News and Videos Portal

கமலியாகும் கயல் ஆனந்தி

நல்ல கல்வி கற்று நல்ல வாழ்க்கை அமைத்துக் கொள்ளும் கனவு ஒருபுறமும், விரும்பியவனை அடையும் காதல் ஒருபுறமும், இருவேறு திசைகளில் இருக்கும் பருவத்தில் இருப்பவள் கமலி. அவள் இந்த இரண்டையும் அவள் அடைந்தாளா என்பதுதான் ‘கமலி from நடுக்காவேரி’ என்றபடம். ஐ.ஐ.டி. பின்னணியில் சொல்லப்பட்ட ஹைடெக் காதல் கதை இது. புதுமுகங்களை நம்பி ஒரு புதுமுக இயக்குநர் மக்களின் நல்ல ரசனையை நம்பி எடுத்த படம். தரமான ஒளிப்பதிவு, தெளிவான திரைக்கதை புதுமையான வசனங்கள் என ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்திருக்கிறாராம் புதுமுக இயக்குநர் ராஜசேகர்.