இயக்குநர் சச்சின் ரவி இயக்கத்தில் ரக்ஷித் ஷெட்டி மற்றும் ஷானாவி ஸ்ரீவத்சா இருவரும் நாயகன் நாயகியாக நடித்திருக்கும் திரைப்படம் ‘அவனே ஸ்ரீமன் நாரயணா”. கன்னட மொழியில் தயாராகி இருக்கும் இப்படம் அண்டை மாநிலங்களான கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா மட்டுமின்றி ஹிந்தியிலும் டப்பிங் செய்யப்பட்டு பெரிய அளவில்
வெளியாகிறது. படம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் பேசிய நாயகன் ரக்ஷித் ஷெட்டி கூறும் போது, “படம் இத்தனை மொழிகளில் வெளியாவது மகிழ்ச்சி அளிக்கிறது. இதில் மிகப்பெரிய மகிழ்ச்சி என்னவென்றால், திரைப்படம் தமிழ் மொழியிலும் வெளியாவது தான். ஏனென்றால் தமிழ் திரையுலகின் இரு பெரும் ஜாம்பவான்களான கமல்ஹாசன், இயக்குநர் பாலச்சந்தர் ஆகியோரைப் பார்த்து திரையுலகிற்கு வந்தவன் நான். அதனால் தமிழிலும் நான் நடித்த படம் வெளியாவது கூடுதல் மகிழ்ச்சி..” என்றார்.