Tamil Movie Ads News and Videos Portal

கள்ளன் பிரஸ்மீட்டில் ஆரி ஆவேசம்

 

சினிமா வலிமையாக இயங்க வேண்டுமானால் மீடியாத்துறை சினிமாவிற்கு பெரிய உதவியாக இருக்க வேண்டும். படம் நன்றாக இருந்தால் சலிக்காமல் பாராட்ட வேண்டும். படம் சரியில்லை என்றால் நாசூக்காக விமர்சனம் செய்யவேண்டும். சிலர் படம் சரியில்லை என்றால் மிகவும் கீழ்த்தரமான முறையில் விமர்சனம் செய்கிறார்கள். இந்தப்போக்கு மாறவேண்டும் என்ற குரல் இப்போது பயங்கரமாக சினிமாவில் ஒலித்து வருகிறது. சமீபத்தில் சந்திரா இயக்கத்தில் கரு.பழனியப்பன் நடிப்பில் தயாராகியுள்ள கள்ளன் திரைபடப்பத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட நடிகர் ஆரி அர்ஜுனன் படங்களை கடுமையாக விமர்சனம் செய்துவரும் ப்ளு சட்டைமாறனை கடுமையாக எதிர்த்துப் பேசினார். குறிப்பாக வலிமை படத்தை விமர்சனம் செய்தபோது அஜித்தின் உடல் குறித்த ப்ளு சட்டை மாறனின் கமெண்ட்களுக்கு பலமான எதிர்ப்பைத் தெரிவித்தார். மேலும் “கள்ளன் படம் பெரிய வெற்றிபெறும்” என்றும் வாழ்த்தினார்