“மாற்றம் மட்டுமே நிலையானது” என்ற தத்துவத்திற்கு எதுவுமே விதிவிலக்கல்ல. தற்போது சினிமாவும் அந்த மாற்றத்தைச் சந்தித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக சில படங்கள் தியேட்டர்களுக்கு வராமல் நேரடியாக OTT-யில் வெளியாகத் துவங்கியுள்ளன. கதிர் நடித்த சிகை படம் முதலில் வெளியானது. இப்போது சற்று பெரிய படமான ஜோதிகா நடித்த பொன் மகள் வந்தாள் படம் வெளியாக இருக்கிறது.
இதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. ஆனால் எதார்த்தை ஏற்றுத் தான் ஆகவேண்டும் என்று நச் என்று தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்ட ஒரு விசயம், “எந்தத் தொழில்நுட்பம் வந்தாலும் தியேட்டர்களை ஒழிக்க முடியாது” என்பது. இந்த விவகாரத்தில் பொன் மகள் வந்தாள் படத்தின் தயாரிப்பாளரான நடிகர் சூர்யாவிற்கு ஆதரவாகப் பேசி இருக்கும் அவர் தியேட்டர்க்காரர்களுக்கும் ஆறுதலாக நாலு வார்த்தையைச் சொல்லி இருக்கிறார்! மகிழ்ச்சி