சிலநாட்களுக்கு முன் நடிகை ரம்யா கிருஷ்ணன் காரில் மதுப்பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. தற்போது ஒரு தயாரிப்பாளர் மாட்டியுள்ளார். பொறுப்புணர்வோடு இருக்க வேண்டியவர்களே இப்படி பொறுப்பற்று இருக்கலாமா?
அந்தத் தயாரிப்பாளர் பற்றி நமக்கு வந்த தகவல்..
சென்னை மதுரவாயல் அருகே போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட காரில் மதுபாட்டில்களை கடத்தியதாக படத்தயாரிப்பாளர் கலைச்செல்வன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் காரில் கடத்தப்பட்ட மதுபாட்டிகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த கலைச்செல்வன் பிரபல நடிகர் சாருஹாசன் நடித்த தாதா 87 சினிமாவை தயாரித்தவர். இவரோடு இன்னொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.