மாற்று சினிமா முயற்சிகளில் அதீத கவனம் செலுத்தும் நடிகராக அறியப்படுபவர் நடிகர் கதிர். இவர் ‘மதயானைக் கூட்டம்’, ‘சிகை’, விக்ரம் வேதா, ’பரியேறும் பெருமாள்’ போன்ற அழுத்தமான படங்களில் நடித்ததன் வாயிலாக மக்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது இவர் மிகப்பிரபலமான மலையாளத்தில் பெரும் வெற்றிபெற்ற திரைப்படமான ”இஷ்க்” படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கவுள்ளார் என்கின்ற செய்தி வெளியாகியுள்ளது.
மலையாளத்தில் ஷேன் நிகம், ஆன் சீத்தல் ஜோடியாக நடித்த இப்படத்தை அனுராக் மனோகர் என்பவர் மலையாளத்தில் இயக்கியிருந்தார். தமிழில் ஷிவ் மோகா என்பவர் இயக்கவிருக்கிறார். மலையாளத்தில் நடித்த ஆன் ஷீத்தலே கதிருக்கும் ஜோடியாக நடிக்கவிருக்கிறார். இவர் காளிதாஸ் படத்தில் பரத்தின் மனைவியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு காதலர்களின் வாழ்க்கையில் போலீஸார் மற்றும் அந்நியர்களின் குறுக்கீடு எந்தளவிற்கு பிரச்சனைகளை உண்டாக்குகிறது..” என்பதனை மையமாகக் கொண்டு இப்படத்தின் திரைக்கதை எழுதப்பட்டு இருக்கிறது.