காதலின் இன்னொரு கோணத்தை மிக அழகாக காட்டியுள்ளார் இயக்குநர் கிருத்திகா உதயநிதி
ஹீரோ மோகன் ரவியும் (ஜெயம் ரவி என்ற தனது பெயரை தற்போது மோகன் ரவி என மாற்றியுள்ளார்) நித்யாமேனெனும் காதலர்கள். ரவி வெளிநாடு செல்ல இருப்பதால் ஒரு பதிவுத்திருமணம் செய்ய இருவரும் முடிவெடுக்கிறார்கள். அந்த முடிவை நிறைவேற்றிய பின் மோகன் ரவி, இன்னொரு பெண்ணோடு படுக்கையைப் பகிர்ந்துகொள்கிறார். அதனால் ஆத்திரம் அடையும் நித்யா மோகன் ரவியை நிராகரிக்கிறார். ‘கல்யாணம் வேண்டாம் ஆனால் குழந்தை வேண்டும் என்று ஆசைப்படும் நித்யா ‘ஸ்பேம் டோனர் மூலம் குழந்தை பெற்றுக்கொள்கிறார். அந்த ஸ்பேம் டோனர் யார்? என்பது பெரிய ட்விஸ்ட் இல்லையென்றாலும், அதை நகர்த்திச் செல்லும் திரைக்கதை செம்மயாக வொர்க் ஆகியுள்ளது
மோகன் ரவிக்குள் இருக்கும் மிகச்சிறந்த நடிகனை வெளிக்கொண்டு வந்துள்ளார் இயக்குநர் கிருத்திகா உதயநிதி. மோகன் ரவி நடிப்பில் இப்படம் நல்ல மைலேஜ் அடையும் என்றால், இந்தப் படம் மூலம் மோகன் ரவி பெரிய மைலேஜ் அடைவார். நித்யா மேனேன் திரையை முழுவதுமாக ஆக்கிரமிக்கும் ராட்சசி. வெறித்தனமாக நடித்து ரசிகர்களை ஈர்க்கிறார். மேலும் ஓரின காதலை சுமக்கும் வினய் சிறப்பாக நடித்துள்ளார். ஏனைய கேரக்டர்கள் யாவரும் தங்களின் நல்ல நடிப்பால் படத்திற்கு நல்லது செய்துள்ளனர்.
ஏ.ஆர் ரகுமான் தனது ஆழமான இசையால் படத்தின் வெற்றிக்கு பெரு உதவி புரிந்துள்ளார். ஒளிப்பதிவாளர் தனது அழகியல் பணியை தன் கேமரா மூலமும் அழகான ப்ரேமிங் மூலமும் அழகாகச் செய்துள்ளார்
மிகவும் கிரிட்டிக்கலான ஒரு கதையை எடுத்து, அதை முகம் சுளிக்காத அளவில் அழகான சினிமாவாக கொடுத்துள்ளார் கிருத்திகா. கத்திமேல் நடக்கும் காட்சிகளை தன் புத்திக்கூர்மையால் அசத்தலான காட்சிகளாக்கியுள்ளார். ஒரு நல்ல திரையனுபவத்தை தவறவிட்டு விடாதீர்கள்
காதலிக்க நேரமில்லை- சந்தோசத்திற்கு பஞ்சமில்லை
3.75/5
-வெண்பா தமிழ்