ஹிப்ஹாப் ஆதியிடம் இருந்து ஒரு வித்தியாச சினிமா
உலகநாடுகளின் கூட்டமைப்பான ஐநாவில் இருந்து சில நாடுகள் தங்களை விடுவித்துக் கொள்கிறது. மேலும் அந்தநாடுகள் தனியாக இரு கட்டமைப்பை உருவாக்குகிறார்கள். இந்தியா அதில் சேராமலும், பகை பாராட்டாமலும் இருந்து வருகிறது. இதனால் இந்தியா தனித்துவிடப்படும் சூழலுக்கு வருகிறது. மேலும் உலகப்போருக்கான சூழலும் வருகிறது. தமிழ்நாட்டில் முதல்வராக வரவிருக்கும் ஹீரோயினோடு லவ்வாகி இருக்கிறார் ஹிப்ஹாப் ஆதி. தமிழ்நாட்டு அரசியலை தன் கைப்பிடிக்குள் வைத்திருக்கும் நட்டி தமிழ்நாட்டில் சில குழப்பங்களை ஏற்படுத்துகிறார். உலக அரசியல், உள்ளூர் கள நிலவரம் இரண்டையும் மிக்ஸ் பண்ணித் தந்துள்ளார் ஹிப்ஹாப் ஆதி. படத்தின் ஹீரோ மட்டுமல்ல..இயக்குநர் தயாரிப்பாளரும் அவரே
தனக்கு எந்த மாதிரியான நடிப்பு வருமோ, அதை மட்டுமே செய்து ஸ்கோர் செய்கிறார் ஹிப்ஹாப் ஆதி. நட்டி மிகச்சிறப்பாக நடித்துள்ளார். நெகட்டிவ் பாத்திரத்தில் நடித்துள்ள அவரது பெர்பாமன்ஸ் படத்திற்கு பாசிட்டிவ்-ஐ ஏற்றுகிறது. ஹீரோயின் உள்பட படத்திலுள்ள அனைத்து கேரக்டர்களும் இயல்பாக நடித்துள்ளனர்
படத்தின் டெக்னிக்கல் டீம் அனைவருமே சிறப்பாக செயல்பட்டுள்ளனர். இசை முன்பாதியில் சற்று முரண்டு பிடித்தாலும், பின்பாதியில் சரியான மீட்டர் பிடித்து இசைக்கிறது. ஒளிப்பதிவாளர் ப்ரேமிங்ஸில் பின்னியுள்ளார்.
ஓரளவு ஆடியன்ஸ் கவரேஜ் நடிகராக இருக்கும் ஹிப்ஹாப் ஆதி நினைத்தால், சிறிய கதை ஒன்றில் நடித்திருக்கலாம். ஆனால் தான் இயக்கும் படம் வித்தியாசமாக இருக்க வேண்டும் என மெனக்கெட்டு இந்த கான்செப்-டை எடுத்துள்ளார். பெரும்பாலான இடங்களில் அவற்றை சரியாகவே செய்துள்ளார். இன்னும் எளிமையான கதை சொல்லலை நிகழ்த்தியிருக்கலாம். மற்றபடி கடைசி உலகப் போரை வரவேற்கலாம்
3/5
-மு.ஜெகன் கவிராஜ்