Tamil Movie Ads News and Videos Portal

கப்ஜா- விமர்சனம்

KGF படத்தின் பாதிப்பில் இருந்து இம்மி அளவும் விலகாமல் ஒருபடம் உருவாகியிருக்கிறது. அதே சவுண்ட், அதே ஆங்கிள்ஸ், அதே மேக்கிங், But ஸ்கிரீன்ப்ளே, எமோஷ்னல் மட்டும் மிஸ்ஸிங்

அமராபுரத்தை யார் ஆள்வது என்ற போட்டி கடுமையாக நிலவுகிறது. இரு குருப்களுக்கு இடையே நிகழும் அந்தப்போட்டியில் உள்ளே நுழைகிறார் உபேந்திரா. பின் அமராபுரம் உபேந்திரா வசம் வருகிறது. அதன் பின்னணியில் நடக்கும் பிரச்சனைகள் தான் கப்ஜா

ஒற்றை மனிதராக படத்தைத் தோளில் தூக்கிச் சுமந்துள்ளார் உபேந்திரா. பைட்டு, நடனம், சோகம், காதல் என அத்தனை களத்திலும் சொல்லி அடிக்கிறார். டஜன் கணக்கில் வரும் வில்லன்களும் குறை வைக்கவில்லை. ஸ்ரேயா படத்தின் பெரும் ஆறுதல். மற்றபடி கிச்சா சுதீப் வெறும் பில்டப் சீனில் மட்டும் தான் வருகிறார். சிவராஜ்குமார் என்ட்ரி ஆகும்போது நாம் டயர்டாகி விடுவதால், அந்தக் காட்சியில் பெரிய அதிர்வு ஏற்படவில்லை

படத்தின் கேமரா கோணங்கள் அப்படியே KGF-ன் நகல். சில இடங்கள் பிரமிப்பு. பல இடங்கள் அலுப்பு. பின்னணி இசை பாடல்கள் இரண்டுமே பெரிய ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை. வசனங்களில் லிப் சிங் என்பதைப் பற்றி துளிகூட கவலைப்படாமல் எழுதித்தள்ளியுள்ளார்கள். வாயசைக்கும் முன்னே டயலாக் வந்து தெறிக்கிறது. Sad sad

ஒரு பிரம்மாண்டமான படம் எடுக்க வேண்டும் என்ற நோக்கம் நியாயமானது தான். ஆனால் அதற்கு கதை& திரைக்கதை பிரமாதமாக இருக்க வேண்டுமல்லவா? அதில் மிகவும் சொதப்பி வைத்திருக்கிறார்கள். மருந்துக்கு கூட படத்தில் எமோஷ்னல் கனெக்டிங் இல்லை. வெறும் பிரம்மாண்டம் மட்டும் போதும் என்று நினைப்பவர்கள் வேண்டுமானால் கப்ஜா பக்கம் போகலாம்
2.5/5

-மு.ஜெகன் கவிராஜ்