தமிழ்சினிமாவில் மர்டர் மிஸ்டரி படங்களின் ஹிஸ்டரியை எடுத்துப் பார்த்தால் பாசிட்டிவான ரிசல்ட்ஸ் தான் கிடைக்கும். அந்த வகையில் இன்று வெளியாகி இருக்கும் கபடதாரி படமும் ஒரு பாசிட்டிவான மூவ்!
ட்ராபிக் இன்ஸ்பெக்டர் சிபிராஜ் 40 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற கொலைகளின் பின்னணியை ஆராயத் துவங்குகிறார். க்ரைம் டிப்பார்ட்மெண்ட்ல உனக்கென்ன வேலை? என்ற மூத்த அதகாரிகளின் நிராகரிப்பையும் மீறி அந்தக் கேஸ் பைலை தூசி தட்டுகிறார். அந்தப்பயணமும் அதன்மூலம் விரிந்து படரும் திருப்பங்களும் தான் படம்.
ஒருவரை கீழ் தள்ளி மேல் வருவது வளர்ச்சியே அல்ல. அவ்வளர்ச்சி என்றேனும் ஒருநாள் தாழ்ந்தே தீரும் என்று படம் பறைசாற்றியுள்ள நீதிக்கு ஒரு like! நாசர் போன்ற வலிமையான நடிகர் முன் சிபிராஜ் திணறாமல் சமாளித்திருப்பதே கெத்து தான். ஆக்ஷன் காட்சிகளில் அசரடிக்கிறார். எமோஷ்னல் ஏரியாவில் இன்னும் கவனம் செலுத்தணும் ப்ரோ. நந்திதாவிற்கு பெரிதாக வேலை ஒன்றுமில்லை. ஜெயப்பிரகாஷ் நேர்மையான பத்திரிகையாளர் கேரக்டரில் எதார்த்தமாக நடித்துள்ளார்.
படத்தின் துவக்கமும் முடிவும் பெரும் பரபரப்பிலே இருப்பது நம்மை யோசிக்க விடாமல் கட்டிப்போட்டு விடுகிறது. படத்தின் பெரும்பலங்களில் முக்கியமாக இருப்பது சைமன் கே.கிங்-ன் பின்னணி இசை. மனிதர் அதகளம் செய்திருக்கிறார். இராசாமதியின் ஒளிப்பதிவும், பிரவின் கே.எல்லின் எடிட்டிங்கும் கச்சிதம். ஒரு கார்ப்பரேட் டிவி சேனலின் ஹெட் ஆக இப்படத்தின் தயாரிப்பாளர் தனஞ்செயன் எதார்த்தமாக நடித்துள்ளார்.
ஒவ்வொரு கதாப்பாத்திரங்களின் தன்மைக்கேற்ப வசனங்களை ஜான் மகேந்திரன் &G தனஞ்செயன் எழுதி இருப்பது சிறப்பு. ஒரு மிரட்டலான ஐடியா இருந்தும் சில இடங்களில் துறுத்தி தெரியும் லாஜிக் மீறல்களை இயக்குநர் சரி செய்திருக்கலாம். படத்தில் தனித்து தேமே என தெரியும் நந்திதாவின் கேரக்டருக்கு ஒரு எமோஷ்னல் கனெக்ட் கொடுத்திருக்கலாம்.
முன்பாதியில் வரும் சின்ன சின்ன ஷாட்களுக்கு கூட பின்பாதியில் ஒரு தொடர்பு கொடுத்திருப்பது நச் ஐடியா. கபடதாரி எப்படியேனும் பார்த்தாக வேண்டும் என்ற கேட்டகிரி படமாக இல்லாவிட்டாலும்.. எப்படியான மைண்ட் செட்டில் சென்றாலும் நமக்கு சலிப்பேற்படுத்தாத படம் என்பதனால் கபடதாரி ஆல்பாஸ் தான்!
-மு.ஜெகன்சேட்