Tamil Movie Ads News and Videos Portal

காத்துவாக்குல ரெண்டு காதல்- விமர்சனம்

நான் நனைஞ்சா பெய்யுற மழை நிற்கும். நான் நுழைஞ்சா நல்லாருக்க வீடும் விக்கும். என்னாலே எல்லாருக்குமே துக்கம்னு சுத்துற ஒருத்தனுக்கு ஒரே டைம்ல ரெண்டு பொண்ணுங்க மேல லவ் வந்தா…அந்த ரெண்டு லவ்வுமே ட்ரூவா இருந்தா? அந்த லவ்ஸ் வந்த பிறகு இவனுக்கு நல்லது நடந்தா? இந்த ரெண்டு பொண்ணுங்களுக்கும் இவன் ரெண்டுபேரையும் ஹேண்டில் பண்ண நினைக்கிறான் என்ற மேட்டர் தெரிஞ்சா? என்ன நடக்கும்? யெஸ் இதுதான் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் கதை

40+ என்பது உருவத்தில் தெரிந்தாலும் நடிப்பில் 30 வயது இளைஞனாக ஈர்க்கிறார் விஜய்சேதுபதி. நயன்தாரா உருகி உருகி நடித்து ஸ்கோர் பண்ணச் சிரமப்படும் கேப்-ல் சமந்தா சமர்த்தாக அசால்ட் பண்ணி அப்ளாஸ் வாங்குகிறார். இருவரின் பெர்பாமன்ஸ் சொல்லியாச்சு…ப்யூட்டியைப் பற்றிச் சொல்லலைன்னா எப்படி?

நயன்தாரா ரசிகர்ஸ் சமந்தாவை பொறாமையோடு பார்க்குறாங்க..சமந்தா ரசிகர்ஸ் நயன்தாராவை பரிதாபமாகப் பார்க்கிறாங்க..(பாதாமை விட பிஸ்தா பெருசுன்னு பாதாம் ஒத்துக்கலைன்னாலும் அது நிஜம்னு தெரியும் போது, பதாம் மனமுடையது விழியழுகுது” )
கிங்க்ஸ்ட்லி மாறன் இருவரும் மிகச்சில இடங்களில் மட்டும் சிரிக்க வைக்கிறார்கள்

ஒளிப்பதிவில் இருக்கும் தரம் ஒவ்வொரு ப்ரேமிலும் அட்டகாசமாகத் தெரிகிறது. பார் இரவு சாதா பகல் என மாறி மாறி வரும் சீக்வென்ஸ்களில் வெரைட்டி காட்டியிருக்கிறார் கேமராமேன். அனிருத்தின் பாடல்களும் பின்னணி இசையும் படத்தின் பெரு எனர்ஜி.

ஒரே நேரத்தில் இரு பெண்கள் மேல் காதல் வந்திருப்பதை விஜய்சேதுபதி எவ்வளவு தான் உருகி உருகி நியாயப் படுத்தினாலும், அதில், “இதெல்லாம் அநியாயம்யா” என்றே நமக்குத் தோன்றுவதால் கதையின் மெயின் மாந்தரோடு ஆடியன்ஸான நாம் இணைந்துகொள்ள முடியவில்லை. படத்தின் திரைக்கதையில் ஆழம் இல்லாமை எப்படி ஒரு பிரச்சனையோ அதேபோல் படத்தின் நீளமும் பெரும் பிரச்சினை.

But…
விஜய்சேதுபதி, சமந்தா, நயன்தாரா இவர்கள் மூவரின் ஸ்கிரீன் பெர்சன்ஸ் நம்மை இழுத்து வைத்து கட்டிப்போடுவதால் படம் முடிந்த பின் படத்தில் தெரியும் குறைகள் படம் பார்க்கும் போது நமக்குத் தெரியவில்லை என்பது படத்தின் பெரிய பாசிட்டிவ். மத்தபடி கதையின் முக்கிய சாராம்சத்தில் பெரும் பிரச்சனை இருப்பதால் காத்து வாக்குல ரெண்டு காதலையும் கடந்து செல்ல முடியவில்லை.. ஆனாலும் இந்தப்படத்தை ஒருமுறையாவது பார்க்காமலும் இருக்க முடியாது…

ஏன்னா…? நயன்தாரா சார், நோ நோ சமந்தா சார், அட அதைவிடுங்க விஜய்சேதுபதி பாஸ்.. அதெல்லாத்தையும் விட படத்தின் மெயின் கான்செப்ட் லவ் பாஸ் லவ்!

மு.ஜெகன் கவிராஜ்