Tamil Movie Ads News and Videos Portal

மாதம் ஒரு படம் வெளியிடுவது என்பது சாதாரண விஷயம் கிடையாது- கண்ணன்!

ஆர். கண்ணன் இயக்கி தயாரித்து இருக்கும் படம் ‘காசேதான் கடவுளடா’. ‘மிர்ச்சி’ சிவா, ப்ரியா ஆனந்த், யோகிபாபு உள்ளிட்டப் பலர் நடித்திருக்ககூடிய இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நேற்று (21.03.2023) நடந்தது.இப்படத்தின் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

இவ்விழாவினில் படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான கண்ணன் பேசியதாவது,

“போன மாதம் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ வெளியானது. இந்த மாதம் ‘காசேதான் கடவுளடா’ திரைப்படம் வெளியாக இருக்கிறது. சினிமா இன்று இருக்கக்கூடிய சூழலில் மாதம் ஒரு படம் வெளியிடுவது என்பது சாதாரண விஷயம் கிடையாது. அதற்கு எனக்கு பலருடைய ஆதரவு இருந்தது. அவர்கள் அனைவருக்கும் நன்றி! குறிப்பாக மகேந்திரன் சார், தயாரிப்பாளர் ராஜன் சாருக்கு நன்றி! மிர்ச்சி சிவா இந்த படத்தின் ஹீரோ. அவர் இல்லாமல் இந்த படம் இல்லை. அவரால்தான் இந்த படம் தொடங்கப்பட்டது. நீண்ட கால நண்பர். இப்போதுதான் இருவரும் படம் இணைந்து வேலை செய்ய சூழ்நிலை அமைந்தது. ‘உள்ளத்தை அள்ளித்தா’, ‘பம்மல் கே சம்மந்தம்’ படம் போல, இந்தப் படம் ஜாலியான ஒன்றாக இருக்கும். படத்தில் நடித்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், உடன்நின்ற அனைவருக்கும் நன்றி”.