‘வலது’ வரம்பு மீறும் போதெல்லாம் (அது எப்போதுமே மீறத்தான் செய்யும்) இடது அதைச் சுட்டிக்காட்டணும்; தட்டிக்கேட்கணும். ரணசிங்கக்காரி கேட்குறாப்ல அரியநாச்சியா மாறி. பிரஸ் பத்தி நான் ஏங்க கவலைப்படணும். அவங்களுக்கு அதுக்குள்ள இன்னொரு ப்ரேக்கிங் நியூஸ் வந்திடும்” என்ற வசனத்தை பாண்டேவை விட்டே பேச வச்ச நக்கலாகட்டும், “எதுடி நம்ம இடம். அமெரிக்காவா? அங்கலாம் நம்ம கருப்பா இருக்கோம்னு சுட்ருவான். இதான் நம்ம இடம்” னு விஜய்சேதுபதி பேசுற நிஜமாகட்டும்..க/பெ ரணசிங்கத்தில் வசனங்கள் எல்லாமே அதகளம் விஜய்சேதுபதி புழுதில காலை வச்சா அனலு நம்ம முழங்காலு வழியா மூஞ்சி வரைக்கும் ஏறுற மாதிரியான ரியல் விஷுவல்ஸ் அள்ளுது. ஒளிப்பதிவு அவ்ளோ நேர்த்தி. பின்னணி இசையும் அந்தக் நேர்த்திலே சேர்த்தி. ரைட்! “கதையை ஒரு வார்த்தையில் சொன்னாலும் படம் பார்க்கும் எனர்ஜி குறைஞ்சிடும் என்பதால் அதைத் தவிர்த்து விடுதலே நலம்.
இந்தப்படத்தின் வில்லனாக அரசும் அது சார்ந்த நடைமுறைகளும்..அதை நடைமுறைப் படுத்த வேண்டிய அதிகாரிளுமாய் இருப்பது தான் அல்டி! படத்தை சீக்கிரமாக முடித்துவிடும் காரணங்கள் படமெங்கும் தென்படுவது தான் திரைக்கதையின் வீக். ஒருசில காட்சிகளை பார்க்காமல் இயர்போன்லே கேட்டுத் தெரிஞ்சிக்கிற அளவுக்கு சில சீன்ல பேசுறாங்க; பேசுறாங்க பேசிக்கிட்டே இருக்காங்க. இப்பலாம் கட்சி மீட்டிங் கூட ஆன்லைன்ல சீக்கிரம் முடிஞ்சிடுது. அதனால் மூன்று மணிநேரம் படத்தை இழுத்திருக்க வேணாம்.
சிந்துபாத் படத்தில் உள்ள உடம்பை அப்படியே இந்தப்படத்திலும் பயன்படுத்திருக்கிறார் போல விஜய்சேதுபதி. பேசும்போதே மூச்சு வாங்குற அளவுக்கு மனுசன் பல்க். ஐஸ்வர்யா ராஜேஷ் பிள்ளையை இடுப்புல வச்சிக்கிட்டு அலையும் போது ராமநாதபுரத்துல உள்ள அக்காமார்கள் தான் கண்ணுல தெரிஞ்சாங்க. தேர்ந்த நடிப்பு ஐஸ்! உரிமையைக் கூட பிச்சையா கேட்க வேண்டியதிருக்கு. கடமையைச் செய்றதை எதோ பிச்சைப் போட்ற ஸ்டைல்ல தான் செய்றானுவ. இதைச் சரிப்பண்றதும் தானா சரியாகுறதும் சாத்தியமான்னு தெரியல. ஆனா இப்படியே நமக்குப் பழகி நாடு நமத்துப் போயிடக்கூடாது. அதுக்கு அப்பப்ப இப்படியான படங்கள் வரணும்!