அறிமுக இயக்குநர் பிரெடெரிக் இயக்கத்தில் ஜோதிகா வக்கிலாக நடிக்கும் படத்திற்கு ‘பொன்மகள் வந்தாள்” என்று பெயரிடப்பட்டுள்ளது. ராம்ஜி ஒளிப்பதிவில் கோவிந்த் வசந்தாவின் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பும் பிற படங்களின் படப்பிடிப்பைப் போல் வைரஸ் பீதியால் தடைபட்டுள்ளது. இப்படத்தில் ஜோதிகா நீதிக்காக போராடும் பெண் வக்கீலாக நடிக்கிறார். இவரோடு முக்கிய வேடங்களில் 5 இயக்குநர்கள் நடிக்கிறார்கள். பிரதாப் போத்தன், பாக்யராஜ், பாண்டியராஜன், பார்த்திபன், தியாகராஜன் ஆகியோர் தான் அந்த ஐந்து இயக்குநர்கள்.
நடிகர்களாகவும் வெற்றி பெற்றவர்கள் இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பாக்யராஜ் ஓய்வு பெற்ற போலீஷ் அதிகாரியாகவும், பிரதாப் போத்தன் மற்றும் பாண்டியராஜ் இருவரும் வக்கீலாகவும், தியாகராஜன் தொழில் அதிபராகவும் நடிக்கவிருக்கிறார்கள். பார்த்திபன் என்ன வேடத்தில் நடிக்கிறாா் என்று தெரியவில்லை.