Tamil Movie Ads News and Videos Portal

ஜோஷ்வா- விமர்சனம்

கான்ட்ராக்ட் கில்லர் லவ்வராக மாறியபின் நடக்கும் ஆக்‌ஷன் மேளா தான் ஜோஷ்வா

ஒரு தரமான ஆக்‌ஷன் ட்ரீட் கொடுக்கவேண்டும் என்ற முடிவோடு திரைக்கதை எழுதியுள்ளார் கெளதம் வாசுதேவ்மெனன். ஹீரோ வருண் காசுக்கு கொலை செய்யும் காஸ்ட்லி கில்லர். அவருக்கு ஹீரோயினைப் பார்த்ததும் லவ் ஆகிறது. ஹீரோயினுக்கும் தான். இருவரும் காதலர்கள் ஆனபின் காதலியை காப்பாற்றும் ஒரு அசைன்மெண்ட் வருணுக்கு வர, அவர் என்னென்ன விளைவுகளைச் சந்தித்தார் என்பதே படத்தின் கதை

ஒரு முழு ஹீரோ மெட்டியரியலாக தன்னை மாற்றிக்கொண்டு அசத்தியுள்ளார் வருண். சண்டைக்காட்சிகளில் காட்டியுள்ள மாஸெல்லாம் கொலமாஸ் எனலாம். நாயகி காதல், எமோஷ்னல் என அனைத்து ஏரியாவிலும் ஸ்கோர் செய்கிறார். வில்லன்கள் கோஷ்டி அனைத்துமே பக்காவான தேர்வு. கிருஷ்ணா கேரக்டர் கூட ஓகே ரகம்

ஆர்.எஸ்.கதிர் தன் கேமராவால் ஆக்சன் மொழி பேசியுள்ளார். ஒவ்வொரு ப்ரேமிங்கும் மாஸ் ஏத்துகிறது. பின்னணி இசை சாதாரண காட்சியை கூட எலிவேட் பண்ணி பின்னுகிறது. ஆக்‌ஷன் டைரக்டர்ஸ் டீம் வொர்க் பாராட்டத்தக்கது. ஒவ்வொரு பைட்டர்ஸும் கைத்தட்டலுக்குரியவர்கள்

காதலியை காக்கும் காதலன் என இன் ட்ரெஸ்டிங்கான ஒன்லைன் பிடித்த இயக்குநர் அதை அழகான திரைக்கதையாக மாற்றியுள்ளார். பின்பாதி படம் மின்னல் போல அதிர்வை ஏற்படுத்துகிறது. ஆக்‌ஷன் விரும்பிகளுக்கு ஒரு செம்ம ட்ரீட் இந்த ஜோஷ்வா
3/5
-மு.ஜெகன் கவிராஜ்