நடுத்தர வாழ்வியலையும் ஊழ்வினை உளவியலையும் தொடர்புபடுத்தி தொடர்பியல் எனும் கதை பின்னினால் அதுதான் ஜீவி2. மேலும் ஒரு சீக்வெல் படம் என்றளவில் சுருங்கி விடாமல் படம் பார்ப்பவர்களின் மனதை நெருங்கி நிற்கிறது ஜீவி2
ஜீவி படம் 2019-ல் வெளியாகி தியேட்டரில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த ஜீவி-2 ஆஹா ஓடிடியில் 19-ஆம் தேதி வெளியாகிறது.வாழ்க்கை தரும் நெருக்கடியால் திருடமுனைகிறார் நாயகன் வெற்றி. அந்த திருட்டுச் சம்பவத்திற்குப் பிறகு நடக்கும் அதிரடி திருப்பங்கள் தான் படத்தின் கதை
நாயகன் வெற்றிக்கு ஒரு நடிகராக தன்னை அழகாக முன்னிறுத்திக் கொள்ளத்தக்க ஒரு வேடம். அதை மிகச்சரியாகச் செய்துள்ளார். அவரின் மனைவியாக வரும் அஷ்வினி கொடுத்த கேரக்டரை உணர்ந்து நடித்துள்ளார். பார்வைச் சவால் கொண்ட பாத்திரத்திற்கு ஒளி கொடுத்துள்ளது அவர் நடிப்பு. கருணாகரன் தனது ட்ரேட்மார்க் எதார்த்த நடிப்பால் அப்ளாஸ் வாங்குகிறார். மைம்கோபி கிடைக்கும் இடங்களில் எல்லாம் ஸ்கோர் செய்கிறார். மீடியாயுலகின் ஹீரோவான முபாஷீர் படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். அவ்வளவு இயல்பாக அக்கேரக்டருக்குள் தன்னைப் பொருத்திக் கொண்டுள்ளார்
சுந்தரமூர்த்தியின் இசையில் கதையின் சூழல் சார்ந்த பாடல் நச் ரகம். பின்னணி இசையிலும் குறையில்லை. ப்ரவீன் குமாரின் ஒளிப்பதிவு திருப்திகரமான பணியைச் செய்துள்ளது.
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையுன் என்ற வள்ளுவனின் ஈரடியை கதையாக கொண்டு அதைச் சரியாமல் தொடர்புபடுத்திய திறன் பாரட்டத்தக்கது. அந்த வகையில் இயக்குநர் வி.ஜே கோபிநாத் ஜெயித்துவிட்டார். படத்தின் மெதுவான ஆரம்பமே வேகமான முடிவுக்கு வித்திடுவதால் அதை கணக்கில் விட்டுவிடலாம். ஓடிடியில் ஹாயாக அமர்ந்து ஒரு Feel good movie பார்க்க நினைப்பவர்களுக்கு ஜீவி2 நல்ல சாய்ஸ்
3/5
-மு.ஜெகன் கவிராஜ்
#Jiivi2