Tamil Movie Ads News and Videos Portal

கர்மா திருப்பி அடிக்கும் ; ஜீவி-2 நாயகன் வெற்றியின் நம்பிக்கை!

கடந்த 2019ல் ‘எட்டு தோட்டாக்கள் புகழ்’ நடிகர் வெற்றி, கருணாகரன் ஆகியோர் நடிப்பில் வித்தியாசமான கதை அம்சத்துடன் வெளியாகி ரசிகர்கள், விமர்சகர்கள் மட்டுமல்லாது திரையுலக பிரபலங்கள் அனைவரிடமும் பாராட்டுக்களை பெற்ற படம் ஜீவி..

இயக்குநர் விஜே கோபிநாத் இயக்கிய இந்தப்படத்தின் இரண்டாம் பாகமாக தற்போது ஜீவி-2 உருவாகியுள்ளது.இந்தநிலையில் படத்தின் நாயகன் வெற்றி இரண்டாம் பாகத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.“எட்டு தோட்டாக்கள், ஜீவி, ஜீவி 2 என கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சீரியஸான படங்களிலேயே நீங்கள் நடிக்கிறீர்களே?! எனக் கேட்கிறார்கள்..

“அப்படி படம் பண்ணினால் தானே கூட்டத்தை கூட்ட முடியும்? முதலில் ஒரு பார்வையாளராக, படம் பார்க்கும்போது எனக்கு போர் அடிக்காமல் இருக்க வேண்டும்.. நாலு நண்பர்கள், ஒரு காதலி, டூயட் இவற்றுடன் வலுவான கதையும் இருந்தால் அதிலும் நடிப்பதற்கு எனக்கு தயக்கம் இல்லை. நான் தற்போது நடித்துவரும் பம்பர் படம் அப்படிப்பட்ட ஒன்றுதான்”.

“ஜீவி-2 எடுக்கப் போகிறோம் என்று சொன்னதுமே எல்லோருமே சொன்ன ஒரே பதில் ‘நாங்கள் வெயிட்டிங்’ என்பதுதான்”..”ஆஹா” ஓடிடி தளத்தில் 19ஆம் தேதி வெளியாகிறது. முதல் பாகம் போல் இதுவும் ரசிகர்களை இழுத்துக் கொள்ளும்.”

“படத்தில் இடம் பெற்றுள்ளது போல முக்கோண விதி, தொடர்பியல் போன்ற விஷயங்களை நிஜத்தில் நான் உணர்ந்ததில்லை. ஆனால் கர்மா என ஒன்று இருப்பதையும் நாம் ஏதாவது தவறு செய்தால் நமக்கு அது திருப்பி அடிக்கும் என்பதையும் நம்புகிறேன்”..

“அதே சமயம் ஜீவி படம் பார்த்துவிட்டு நிறைய பேர், தங்கள் வாழ்க்கையில் இதுபோன்று நிகழ்வுகள் நடந்திருப்பதாக கூறியபோது ஆச்சரியப்பட்டேன்”.”ஜீவி 2 படப்பிடிப்பை திட்டமிட்டு அழகாக அதே வேளையில் படத்தின் பிரமிப்பில் குறைவில்லாமல் முடித்துள்ளோம்”.” இந்த படத்தில் நடித்தது ஒரு ரீ-யூனியன் போல தான் இருந்தது”.

இப்போது ஜீவி-2 முடிந்ததுமே இதற்கு மூன்றாம் பாகம் உருவாகுமா என பலரும் கேட்க ஆரம்பித்து விட்டார்கள். இந்த படத்திற்கு கிடைக்கும் ரசிகர்களின் வரவேற்பும் விமர்சனங்களும் தான் அதை முடிவுசெய்ய வேண்டும்.
.
இந்த படத்தில் நடித்து முடித்தபோது ஒரு படத்தின் இரண்டாம் பாகத்தை மிக திருப்தியாக முடித்துள்ளோம் என்கிற எண்ணம் தான் எழுந்தது. மீண்டும் இதே குழுவுடன் இணைந்து இன்னொரு படத்தில் பணியாற்றும் ஆசையும் இருக்கிறது. ஆனால் அது மூன்றாம் பாகமா என்பது தெரியாது” என சஸ்பென்ஸ் வைத்து முடிக்கிறார் நடிகர் வெற்றி.