Tamil Movie Ads News and Videos Portal

ஜிகிரி தோஸ்து- விமர்சனம்

ஜாலியான தலைப்பில் ஒரு ஸ்மால் திரில்லர் படம் ஜிகிரி தோஸ்து

ஷாரிக் ஹசன், அரன், விஜே ஆஷிக்! மூவரும் ஜிகிரி தோஸ்துகள். இவர்கள் 500 மீட்டரில் உள்ளவர்கள் செல்போனில் பேசுவதை ஒட்டுகேட்கும் ஒரு சாதனத்தை கண்டுபுடிக்கிறார்கள். ஆரம்பத்தில் அது சொதப்பிவிடுகிறது. அதனால் கல்லூரி நிர்வாகம் இவர்களின் டெக்னாலஜியை ரிஜெக்ட் செய்கிறது. ரிஜெக்ட் செய்யப்பட்ட டெக்னாலஜியை வைத்தே ஒரு கடத்தல் சம்பவத்தை அம்பலப்படுத்த முயல்கிறது இந்த நட்புக் கூட்டணி. அது நடந்ததா? என்பதே இரண்டு மணிநேர படமாக விரிகிறது

மூன்று பேர்களுக்கும் சம பங்கு பிரித்துக்கொடுத்தது போல சரிக்கு சமனான கேரக்டர். விஜே ஆஷிக் அவ்வப்போது கலகலப்பூட்டுகிறார். ஷாரிக் ஹசன், அரன் இருவரும் நடிப்பில் பார்டரைத் தாண்டியிருக்கிறார்கள். வில்லன் டீம் உள்பட மற்ற நடிகர்கள் எல்லோரும் ஒகே ரகமாக நடித்துள்ளனர்

படத்தின் ஆகப்பெரிய பலமே அஸ்வின் விநாயகமூர்த்தியின் இசை தான். சுமாரான காட்சிகளை கூட சூப்பர் மோட்-க்கு மாற்ற உதவியுள்ளது அவரது பேக்ரவுண்ட் ஸ்கோர். ஒளிப்பதிவும் எடிட்டிங்கும் திரைக்கதைக்கு தேவையானதைச் செய்துள்ளது

உரிய காலத்தில் இந்தப்படம் இன்னும் சற்று மேம்படுத்தப்பட்டு வந்திருந்தால் நிச்சயமாக கவனிக்கப்பட்டிருக்கும். வசனங்களிலும் காட்சிகளின் ஸ்டேஜிங்கிலும் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். இருப்பினும் மிகச்சிறிய பட்ஜெட்டில் ஒரு நல்ல முயற்சி செய்துள்ளனர். ஜிகிரி தோஸ்தை ஊக்கப்படுத்துவதாய் நினைத்து ஒருமுறை பார்க்கலாம்
2.5/5
-மு.ஜெகன் கவிராஜ்