‘ஜீவா’ படப்புகழ் லக்ஷ்மண், சம்யுக்தா ராஜ்குமாரை மணந்தார்!
இயக்குநர் சுசீந்தரனின் ‘ஜீவா’ படத்தில் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த நடிகர் லக்ஷ்மணுக்கும், பழனிக்கு அருகிலுள்ள நெய்காரப்பட்டியைச் சேர்ந்த சம்யுக்தா ராஜ்குமாருக்கும் கடந்த நவம்பர் 10ஆம் தேதி மதுரை இடா சுடர் அரங்கில் திருமணம் இனிதே நடைபெற்றது. கர்நாடகாவில் உள்ள பெல்காம், ஜவகர்லால் நேரு இன்ஸ்டிட்யூட்டில் தற்போது ஐந்தாம் ஆண்டு எம்.பி.பி.எஸ். பயிற்சி மருத்துவராக பணியாற்றும் சம்யுக்தா, தேனி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருக்கிறார். அங்கு தன் மருத்துவப் பயிற்சியை தொடர்கிறார். நடிகர் லக்ஷ்மண் தற்போது ஆடை ஏற்றுமதி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.