Tamil Movie Ads News and Videos Portal

இரட்டை மகிழ்ச்சியில் “ஜீவா”

- Advertisement -

‘ஜோக்கர்’ திரைப்படத்தைத் தொடர்ந்து ராஜூ முருகன் இயக்கத்தில் உருவான திரைப்படம் “ஜிப்ஸி”. படம் முடிவடைந்து பல நாட்கள் ஆகியும் தணிக்கை பெறுவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக படம் வெளியாகாமல் இருந்து வந்தது. தற்போது ஒரு வழியாக படத்திற்கு “ஏ” சான்று கொடுக்கப்பட்டு, வெளியிடலுக்கு படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் நடாஷா ஜீவாவிற்கு ஜோடியாக நடித்திருக்கிறார். மேலும் ”றெக்க” பட இயக்குநர் ரத்தின சிவா இயக்கத்தில் ஜூவா, ரியா சுமன் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படமான “சீறு” திரைப்படமும் இந்த மாதம் 20ம் தேதி அன்று வெளியாகவிருக்கிறது. இதனால் இரட்டை சந்தோஷத்தில் இருக்கிறார் ஜீவா.

- Advertisement -