நிலையான மற்றும் தொடர்ச்சியான வெற்றியைக் கொடுக்கும் நடிகர்களின் வரிசையில் ஜெயம் ரவியும் இணைந்துவிட்டார். ஜெயம் ரவி நடிக்கும் படங்கள் எல்லாம் மினிமம் கேரண்டி அல்லது மிகப்பெரிய வெற்றி என இரண்டே கேட்டகிரியில் விழுவதால், அவரை வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் முட்டி மோதுகின்றனர். ‘கோமாளி’ படத்தின் அசுரத்தனமான வெற்றியைத் தொடர்ந்து.
அடுத்து ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘பூமி”. ஏற்கனவே இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்ப்பைப் பெற்றிருக்கும் நிலையில் இப்படத்தின் டீஸர் வரும் மார்ச் 9ம் தேதி அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெயம் ரவி நடித்த ‘ரோமியோ ஜூலியட்’ மற்றும் ‘போகன்’ ஆகியப் படங்களை இயக்கிய லஷ்மண் இப்படத்தை இயக்கியுள்ளார்.