Tamil Movie Ads News and Videos Portal

ஜெயலலிதா படத்தில் என்.டி.ஆர் தேவை..!?

நடிகையும் முன்னாள் தமிழக முதல்வருமான ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை ஏ.எல்.விஜய் திரைப்படமாக எடுத்து வருகிறார். கங்கணா ரனாவத் ஜெயலலிதாவாகவும், அரவிந்த்சாமி எம்.ஜி.ஆர் ஆகவும் நடிக்கும் இப்படத்தில் பூர்ணா சசிகலா வேடத்தில் நடித்து வருகிறார். மேலும் ஜெயலலிதா தெலுங்கு நடிகரும் சூப்பர் ஸ்டாருமான என்.டி.ஆருடன் பல படங்களில் இணைந்து நடித்திருப்பதால் என்.டி.ஆர் தொடர்பான மூன்று காட்சிகளை வைக்க திட்டமிட்டு, அந்த வேடத்தில் நடிப்பதற்கு என்.டி.ஆரின் மகனும் பிரபல தெலுங்கு நடிகருமான பாலகிருஷ்ணாவைப் படக்குழு அணுகியது.

ஆனால் என்.டி.ஆர் வாழ்க்கை வரலாற்றின் இரண்டாம் பாகத்திலும் அவர் நடித்து வருவதால் இப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவரின் மகனான ஜூனியர் என்.டி.ஆரிடம் நடிப்பது தொடர்பாக பேசப்பட்டது. அவரும் நடிக்க மறுத்துவிட்ட நிலையில், என்.டி.ஆர் வேடத்தில் நடிப்பதற்கு பொறுத்தமான நடிகரை படக்குழு தேடி வருகிறது.