“கப்பல்ல பொண்ணு வந்தா எனக்கொன்னு என் அப்பனுக்கு ஒன்னு, பொறக்கப் போற என் தம்பிக்கு ஒன்னு” என்ற பழமொழி கிராமத்துல ரொம்ப பேமஸு. இப்பவுள்ள பல சோஷியல் மீடியா கோளாறுகளுக்கும் இந்தப்பழமொழி பொருந்தும். ஏன்னா ஒரு படம் பற்றி நெகட்டிவா ஒரு நியூஸ் வந்தாலே எனக்கு உனக்குன்னு அடிச்சிப் பிடிச்சி ஷேர் பண்றாங்க. அப்படி வந்த ஷேர்களில் ஒன்று தான் ஜெயிலர் படத்தின் நெகட்டிவ் ரிப்போர்ட்டும். But அதையெல்லாம் தாண்டி படம் சக்கைப் போடு போட்டு வருகிறது என்பதே நிஜமான கள நிலவரம். ரஜினி நடித்த சிவாஜி படத்தில் விவேக் ஒரு டயலாக் சொல்வார். “நீ கொஞ்சம் கேப் விட்ட..யார் யாரோ பன்ச் டயலாக்லாம் பேசுறாங்கப்பா” என்பார். அதுபோல் ரஜினிக்கு அண்ணாத்த சற்று சறுக்கியதும் என்னென்னவோ சொல்லி வெறுப்பேத்தினார்கள். ஆனால் அதையெல்லாம் தாண்டி இன்று ஜெயிலர் வசூலில் அடித்து துவம்சம் செய்துள்ளது. ரஜினி நெல்சன் கூட்டணியில் இந்த வருடத்தின் மாபெரும் வெற்றிப்பட லிஸ்டில் நெற்றிப்பொட்டு போல் அமைந்துள்ளது ஜெயிலர். “தலைவரு நிரந்தரம்” என்ற பாட்டுவரி ட்ரூ என்பதாக படத்தின் ஐந்து நாள் வசூலை அபிஷியலாக அப்டேட்டியுள்ளது சன்பிக்சர்ஸ். அதன்படி தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கு, ஓவர்சீஸ் என மொத்தம் வேர்ல்டு வைஸ் கலெக்ஷன் மட்டும் இந்த ஐந்து நாட்களில் 375.40 Crores. இப்படியொரு வெற்றிக்காக அப்படியொரு உழைப்பைப் போட்ட படக்குழு நேற்று ரசிகர்கள் மற்றும் ஊடகங்களுக்கு நன்றி சொல்லும் விழாவில் கலந்து கொண்டது. விழாவில் கலந்துகொண்ட நெல்சன் உள்ளிட்ட அனைவரின் கண்களிலும் ஒரு களிப்பு தெரிந்தது.. யெஸ் அது வெற்றிக்களிப்பு🔥