ஜி.வி.பிரகாஷை ஒரு மிகச்சிறந்த இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய திரைப்படம் என்றால் அது வெயில் தான். அதற்குப் பின்னர் தான் அவரின் இசையமைப்பு பெரிதாக பேசப்பட்டது. அப்படத்தை வசந்தபாலன் இயக்கியிருந்தார். தற்போது அதே வசந்தபாலன் இயக்கத்திலேயே ஹீரோவாக நடித்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்குமார்.
இப்படம் கண்டிப்பாக தன்னை ஒரு மிகச்சிறந்த நடிகனாக அடையாளப்படுத்தும் என்று நம்புகிறார் ஜி.வி.பிரகாஷ்குமார. படம் வெளியாவதற்கு தயாராகி பல மாதங்கள் ஆகியும் இன்னும் வெளியாகவில்லை. இது குறித்து தன் முகநூல் பதிவில் இயக்குநர் வசந்தபாலன் வருத்தம் தெரிவித்து இருந்தார். தற்போது இது தொடர்பாக கருத்து கூறியிருக்கும் ஜி.வி, ‘ஜெயில் என் கேரியரில் மிகச்சிறந்த ஓர் படம். அதை வெளியிடுவதில் இருந்த எல்லா சிக்கல்களும் தீர்ந்துவிட்டன. படம் விரைவில் வெளியாகும்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.