Tamil Movie Ads News and Videos Portal

சூர்யாவின் ஜெய் பீம் ட்ரெய்லர், அக்டோபர் 22 அன்று வெளியாகிறது!

ஜெய் பீம் புதிய போஸ்டரை வெளியிட்டு அதில் படத்தின் ட்ரெய்லர் அக்டோபர் 22 வெள்ளிக்கிழமை அன்று வெளியாகும் என்று குறிப்பிட்டதன் மூலம், திரைப்படத்துக்கான எதிர்பார்ப்பை இன்னும் ஒரு மடங்கு எகிற வைத்திருக்கிறது அமேசான் ப்ரைம். கூட்டத்தில் தனியாளாக உயர்ந்து நிற்கும் சூர்யாவின் சக்திவாய்ந்த தோற்றத்தை இந்தப் புதிய போஸ்டர் காட்டுகிறது.
தீபாவளியை முன்னிட்டு, நவம்பர் 2ஆம் தேதி, அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஜெய் பீம் ப்ரீமியர் வெளியீடாக ஸ்ட்ரீம் ஆகவுள்ளது.
அக்டோபர் 22ஆம் தேதி படத்துக்கான ட்ரெய்லரை ஆவலுடன் எதிர்பார்த்திருங்கள்.