Tamil Movie Ads News and Videos Portal

உலகம் முழுக்க, வெற்றி கொடி நாட்டும் “ஜகமே தந்திரம்” !

சனிக்கிழமை 2021 ஜூன் 26 :
Netflix தளத்தில் வெளியிடப்பட்ட நொடியிலிருந்து “ஜகமே தந்திரம்“ திரைப்படம், இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுக்க பேரதிர்வை ஏற்படுத்தி வருகிறது. Netflix வெளியான முதல் வாரத்தில், “ஜகமே தந்திரம்” படத்தினை பார்த்தவர்களின் பிரமாண்ட எண்ணிக்கையில், பாதிப் பார்வையாளர்கள் இந்தியாவிற்கு வெளியிலிருந்து பார்த்த பார்வையாளர்களே ஆவர். உலகின் பல மூலைகளிலிருந்தும் ”ஜகமே தந்திரம்” படத்தினை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். உலகம் முழுக்க 12 நாடுகளில், டாப் டென் படங்களின் வரிசையில் இடம்பிடித்திருக்கிறது “ஜகமே தந்திரம்” திரைப்படம். இத்திரைப்படம் மலேஷியா, அரபு எமிரேட்ஸ் மற்றும் இந்தியா உட்பட 7 நாடுகளில் டாப்டென் வரிசையில் நம்பர் 1 இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளது. சுருளியின் ரகிட ரகிட அலப்பறை உலகம் முழுக்க பரவி விரிந்திருக்கிறது.