Tamil Movie Ads News and Videos Portal

காக்டெய்ல் பட இயக்குனரின் அடுத்த படம் “ஜகா”!

மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்ட யோகிபாபு நடித்த காக்டெய்ல் படத்தை இயக்கிய ரா.விஜயமுருகன் இப்படத்தை இயக்குகிறார்.ஆடுகளம் முருகதாஸ் மைம் கோபி இவர்கள் இருவரும் இதுவரை பன்னாத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இவர்களுடன் ஹரி யோகி வலினாபிரின்ஸ் தயாரிப்பாளரும் நடிகருமான M.S குமார் மற்றும் வளர்ந்து வரும் நடிகர்கள் பலர் நடிக்கின்றனர்.

தேனி ஈஸ்வரின் சீடரான V.ராஜசேகர் ஒளிப்பதிவாளராக அறிமுகம் ஆகிறார்.இசை சாய் பாஸ்கர் படத்தொகுப்பு ராம் செழியன் பாடல் சதிஷ் தயாரிப்பு மேற்பார்வை ஆத்தூர் ஆறுமுகம் மக்கள் தொடர்பு A. ஜான்
படத்தை பற்றி இயக்குனர் கூறியதாவது.

கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் மனநல காப்பகம் நடத்தி வருகிறார் மைம் கோபி அந்த இடத்தை அடைய ஒரு கும்பல் பல வழிகளில் முயற்சி செய்கிறது.ஆனால் அவ்விடத்தை கொடுக்க மறுக்கிறார் மைம் கோபி.
காப்பகம் காப்பாற்றப்பட்டதா? கைப்பற்றப்பட்டதா? என்பதை நகைச்சுவையுடன் சொல்லி இருக்கிறோம்.
மேலும் பதினெட்டாம் நூற்றாண்டு காலத்தையும் நிகழ்காலத்தையும் இணைத்து பின்னப்பட்ட முருகதாஸ் கதாபாத்திரம் புதுமையாக இருக்கும் என்றார்.

முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு பாபநாசத்தில் தொடங்கி கொடைக்கானலில் மிகுந்த பனிப்பொழிவுக்கு நடுவே அண்மையில் நடந்து முடிந்தது. விரைவில் அடுத்த கட்ட பணிகள் தொடங்குகிறது…