Tamil Movie Ads News and Videos Portal

ஜே.என்.யு மாணவர்களுக்கு ஆதரவாக தீபிகா படுகோனே

 

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து பல்வேறு மாநிலங்களில் பொதுமக்களும் மாணவர்களும் போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில், ஆளும் மத்திய அரசு அதனை தனது அடக்குமுறை நடவடிக்கைகளின் மூலம் நிறுத்தப் பார்க்கிறது. இதன் உச்சகட்டமாக ஜே.என்.யு பல்கலைக்கழக மாணவர்கள் மீது ஒர் அடையாளம் தெரியாத கும்பல் நடத்திய தாக்குதல் அரங்கேறியிருக்கிறது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்திருப்பதோடு, போராட்டம் நடத்தும் மாணவர்களுக்கு தங்களின் ஆதரவையும் தெரிவித்துள்ளனர்.

பாலிவுட்ரைப்பட நடிகைகளான டாப்ஸி, அலியா பட், சோனாக்ஸி சின்ஹா, கியூமா குரோஸி, தியா மிர்ஸா, சுவரா பாஸ்கர், சோனம் கபூர் போன்ற பலரும் மாணவர்களுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர். நடிகை தீபிகா படுகோனே ஒருபடி மேலே சென்று, பல்கலைகழகத்தில் மாணவர்கள் சார்பாக நடைபெற்ற போராட்டத்திலும் பங்கேற்றார். இதனால் அவருக்கு பாராட்டுகளும் அதே சமயம் எதிர்ப்புகளும் ஒருங்கே கிடைத்து வருகிறது. ஒரு சிலர் இன்று தீபிகா படுகோனேவின் ‘சப்பாக்’ படம் வெளியாவதால், அதற்கு விளம்பரம் தேடும் வகையில் இப்படி நடந்து வருகிறார் என்று கேலி செய்கின்றனர். ஆனால் இதற்கு பதிலளித்திருக்கும் தீபிகா “இது போன்ற எதிர்மறை விமர்சனங்கள் வரும் என்று தெரியும். ‘பத்மாவத்’ திரைப்படம் வெளியான போதும் இது போன்ற பிரச்சனைகளை சந்தித்தேன். என் மனதில் தோன்றுவதை நான் வெளிப்படையாக பேச விரும்புகிறேன். விமர்சனம் குறித்தெல்லாம் கவலையில்லை. தற்போது இந்தியாவின் நிலையை நினைத்துத் தான் கவலையாகவும் பயமாகவும் இருக்கிறது.” என்று விளக்கமளித்துள்ளார்.