தமிழில் வெளியான தாய்ப்பாச படங்களில் சற்று வித்தியாசமான முயற்சி இந்த ஜே பேபி
அட்டகத்தி தினேஷின் அம்மாவான ஊர்வசி தொலைந்து போகிறார். மகனான அட்டக்கத்தி தினேஷும், மாறனும் அவரை கண்டுபுடிக்க பயணப்படுகிறார்கள். அவர்களின் பாசப்பயணத்தின் வழியே சொல்லப்படும் சம்பவங்கள் தான் படத்தின் திரைக்கதையாக விரிகிறது
நல்ல நடிகை என்ற பெயரை தனது முதல்படத்திலே பெற்றுவிட்டு ஊர்வசி இன்றும் அதை தக்க வைத்துள்ளார் என்பதற்கு தக்கச் சான்று இந்தப்படம். மனிதி அசத்தியுள்ளார். அட்டக்கத்தி தினேஷ் தானொரு மிகச்சிறந்த நடிகன் என்பதை நச் என ஒரு காட்சியில் உணர்த்துகிறார். மாறன் உடையும் ஒரு காட்சியில் நம் மனதையும் உடைக்கிறார்
கதையோட்டத்தின் தன்மையை உணர்ந்து இசையை வழங்கியுள்ளார் இசையமைப்பாளர். ஒவ்வொரு ப்ரேமிங்கும் ஒரு கதை சொல்ல வேண்டும் என மெனக்கெட்டுள்ளார் ஒளிப்பதிவாளர். எடிட்டர் இன்னுமே ஷார்ப் ஆக இருந்திருக்கலாம்
மனித வாழ்வில் ஏற்படும் மன முரண்பாடுகளை அன்பைக் கொண்டு களைய வேண்டும் எனச் சொல்கிறது படம். உண்மைச் சம்பவத்தின் அடிப்படையிலான கதை என்பதால் நம்மால் இரண்டாம் பாதியை ஓரளவு யூகிக்க முடிகிறது. ஆயினும் அந்தக் க்ளைமாக்ஸ் நம் மனதை உருக்கிவிடுகிறது. எப்போதுமே இந்த பொன்னுலகம் அம்மாக்களால் ஆனது தான். அதனால் தாயான இந்த பேபியை அவசியம் தியேட்டரில் சென்று பாருங்கள்
3.5/5
-மு.ஜெகன் கவிராஜ்