இயக்குநர் சரணின் “மார்க்கெட் ராஜா – எம்.பி.பி.எஸ்”
இயக்குநரும் தயாரிப்பாளருமான சரண் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இயக்கியிருக்கும் திரைப்படம் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். பிக் பாஸ் புகழ் ஆரவ் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் ராதிகா சரத்குமார் முக்கியமான வேடம் ஏற்று நடித்திருக்கிறார். காவ்யா தர்பார் நாயகியாக நடிக்க, ரோகிணி, நாசர், நிகிஷா படேல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். சைமன் கே.கிங் இசையமைப்பில் கே.வி.குகன் ஒளிப்பதிவில் உருவாகியிருக்கும் இப்படத்தை சுரபி பிலிம்ஸ் சார்பில் எஸ்.மோகன் தயாரித்திருக்கிறார். இப்படம் டிசம்பர் மாதம் 29ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.