கொரோனா கொடுமையைவிட கத்தரி வெயிலின் கொடூரம் உச்சம் தொடத் துவங்கியுள்ளது தமிழகத்தில். இதிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள பலரும் பலவிதமான நடவடிக்கைகளில் இறங்கி உள்ளனர்.
முன்னாள் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியும், தற்போது படங்களில் நடித்து வருபவருமான ரம்யா, தன் உடல் முழுவதையும் தண்ணீருக்குள் மூழ்கடித்து முகம் மட்டும் வெளியே தெரியும்படி ஒரு புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு, அதில், “கத்தரி வெயிலில் இருந்து எப்படி தப்பிக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்” என்று பதிவிட்டிருந்தார். அந்தப் புகைப்படத்தில் அவரது முகத்தில் மேக்கஃப் தூக்கலாக இருந்தது. இதனைப் பார்த்த ரசிகர்கள், “குளிக்கும் போதே இவ்ளோ மேக்கப்பா..? அப்ப குளித்த பிறகு..?” என்று கேள்வி எழுப்பி கிண்டல் செய்யத் துவங்கியுள்ளனர்.