Tamil Movie Ads News and Videos Portal

இசைஞானிக்கு இது புதுசு

1980ம் ஆண்டிலிருந்து இன்று வரை ‘உன்ன நெனைச்சி நெனைச்சி நானே உருகிப் போனேன்’ என அவரது பெயரைச் சொன்னாலே உருகிப் போகும் அளவிற்கு ரசிகர்கள் மனதில் ஆட்கொண்டு இருப்பவர் இசைஞானி இளையராஜா என்றால் அது மிகையாது. அவரது இசைப்பயணத்தில் அவர் படங்களுக்கு பின்னணி இசைக்கோர்ப்பு பணிகளை எப்பொழுதும் பிரசாத் ஸ்டூடியோவில் வைத்தே நடத்தியிருக்கிறார்.

ஆனால் தற்போது பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் அவருக்கு இடமளிக்க மறுக்கும் விவகாரம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீஷன் நடிப்பில் உருவாகியிருக்கும் “தமிழரசன்” படத்தின் பின்னணி இசைக் கோர்ப்பு பணியை தனது வீட்டிலேயே தொடங்கியிருக்கிறார் இளையராஜா. இது இளையராஜாவின் இசைப்பயணத்தில் புதிய விசயமாகும். அனைத்து வாத்தியக் கலைஞர்களையும் தன் வீட்டிற்கே வரவழைத்து, பின்னணி இசைக் கோர்ப்பை நடத்தி அசத்தியிருக்கிறார் இளையராஜா என்னும் நம் இசையின் ராஜா.