Tamil Movie Ads News and Videos Portal

#IStandwithRajinikanth டிரெண்டிங் ஆன ரஜினி

குடியுரிமை சட்ட திருத்த மசோதா பலவிதமான குழப்பங்களையும், குரோதங்களையும் விளைவித்திருக்கிறது. இதனால் இந்தியாவின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சில இடங்களில் வன்முறையும் வெடித்திருக்கிறது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த ரஜினிகாந்த் “எந்தவொரு பிரச்சனைக்கும் வன்முறை என்பது தீர்வாகாது” என்று கருத்து தெரிவித்திருந்தார். இதனையடுத்து ரஜினியின் பேச்சுக்கு

மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பியது. பலரும் #SameOnYouShanghiRajini என்ற ஹேஷ்டேக்கை ஏற்படுத்தி அதை டிரெண்டிங் ஆக்கினர். இதற்கு பதிலடியாக ரஜினியின் ஆதரவாளர்கள் #IStandWithRajinikanth என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி அதை டிரெண்டிங் ஆக்கும் முயற்சியில் இறங்கினார். அந்த ஹேஷ்டேக் தற்போது டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்திருப்பதோடு; ரஜினி பேசிய வீடியோவும் வைரலாகி வருகிறது. இந்த ஹேஷ்டேக்கை பிரபலப்படுத்திய அனைவருமே ரஜினியின் பேச்சுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.