இந்த அதீதி பண்ற அநியாயத்தை கேட்க ஆளே இல்லையா?
“பொண்டாட்டி ஓடிப்போய்ட்டா கண்டு புடிச்சி கொடுங்க ஏட்டையா” என்ற லெவலுக்கு நடிகர் அபி சரவணன் இறங்கி வந்து நடிகை அதிதியை தன்னோடு இணைத்து வைக்கும் படி சில மாதங்களுக்கு முன் மன்றாடினார். அதற்கான காரணம் இருவரும் திருமணம் முடித்து ஈருடல் ஓர் உயிர் மற்றும் ஒரே வீடாகவும் இருந்தார்கள். திடீர் என்று அதிதி ஒருநாள் காணாமல் போனார். கேட்டால் “ச்சீ அபியை எனக்குப் புடிக்கல. அவரை நான் கல்யாணமும் பண்ணல” என்றார். கொதித்தெழுந்த அபி இருவரும் கல்யாணம் கட்டிக்கொண்டதையும் கண்ட இடத்தில் ‘கட்டி’க்கொண்டதையும் புகைப்பட தொகுப்பாக வெளியீட்டு அள்ளு கிளப்பினார். பஞ்சாயத்து நீதிமன்றத்துக்குப் போக இன்றைக்கு மதுரை கோர்ட்டில் அதிதியை குடும்பநல கவுன்சிலிங்கில் கலந்துக்க சொல்லி இருக்கிறார்கள். ஆனால் “நோ நோ நான் மேல் கோர்ட்டுல பார்த்துக்கிறேன்” என்று அதிதி உதார் விட, நீதிபதி காண்டாகி ப்ளார் விடாத குறையாக அதிதியை எச்சரித்து கவுன்சிலிங்கில் கலந்துக்கச் சொல்லிருக்கார். இந்தப்பொண்ணு பண்ற அநியாயத்தைக் கேட்க ஆளே இல்லையா?