கேரள நடிகைகளில் பலர் நடிப்பது மட்டுமின்றி பாடல்கள் பாடுவதிலும் வல்லவர்களாக இருக்கிறார்கள். ரம்யா நம்பீசன், லட்சுமி மேனன், நித்யா மேனன் என மலையாள மண்ணில் பாடவும் தெரிந்த நாயகிகள் ஏராளம். இவர்களில் நித்யாமேனன் ஒருபடி மேலே சென்று பாடல்களுக்கு இசை அமைப்பதிலும் தேர்ந்தவராக விளங்குகிறார்.
இவர் லண்டனைச் சேர்ந்த இசைக் கலைஞர் செளமிக் தத்தாவுடன் இணைந்து தான் உருவாக்கியிருக்கும் ஒரு பாடலை விரைவில் வெளியிடவிருக்கிறார். அது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டிருக்கும் நித்யா “நான் இசையமைத்து உருவாக்கியப் பாடலை அனைவரும் கேட்கவிருக்கும் நாளுக்காக காத்திருக்க முடியவில்லை” என்று டிவிட்டியிருக்கிறார்.