“சாதா அரிப்பு ஆரம்பிச்சாலே அய்யோ அவருக்குச் சதை பிஞ்சிடிச்சி” என்பது சினிமா உலகின் கொடுமையான வழக்கம். தற்போது சில மீடியாக்களும் தங்களது பசிக்கு இல்லாத ஒன்றை இருப்பதாய் இட்டுக்கட்டிக் கொள்கிறார்கள். சமீபத்தில் சியான் விக்ரம் பற்றி அப்படியொரு செய்தியை கோர்த்து விட்டன சில மீடியாஸ்.
கோப்ரா படத்தில் 20 கெட்டப்களில் நடிக்கும் விக்ரம் இனி சினிமாவில் இயங்கப் போவதில்லை என்றும், தன் மகனை சினிமாவில் பெரியாள் ஆக்குவதற்காக துணை நிற்கப்போகிறார் என்றும் அள்ளவிட்டார்கள். பதறிப்போன விக்ரம், தன் தரப்பு ஆட்கள் மூலமாக அதற்கு விளக்கம் கொடுத்துள்ளார்.
கோப்ரா பொன்னியின் செல்வன் படங்களைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்கவிருக்கிறார் விக்ரம். என்பதே அச்செய்தி!
பர்ஸ்ட் இதை நோட் பண்ணுங்கப்பா!